பூதலூர் ஒன்றியம் கடம்பங்குடி கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் பழுதடைந்து உள்ளது. மேலும் மாற்று இடத்தில் அலுவலகம் செயல்படுவதால் பொதுமக்களுக்கு தெரிவது இல்லை. இதனால் இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கடம்பக்குடி