மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு கல்லூரி, தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்தநிலையில் போதிய பஸ் வசதி இல்லாததால் ஏராளமான மாணவர்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் மாணவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வரக்கூடிய பஸ்சும் குறித்த நேரத்தில் வருவது இல்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள், மயிலாடுதுறை.