திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி 13-வது வார்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடம் கஜா புயலில் சேதம் அடைந்தது. ஆனால் இதுவரைக்கும் பள்ளியை சீரமைக்க வில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கூத்தாநல்லூர்.