சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை செய்யும் இடமான பிணவறைக்கு தினமும் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அதிக குடும்பங்களும், போலீசாரும் வந்து செல்வார்கள். பிணவறையின் நுழைவு வாயில் அருகே உள்ள கழிவுநீர் தொட்டி சேதமடைந்து அதில் இருந்து கழவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அங்கு மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.