திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அதிக இடங்களில் செடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கழிவுநீரும் ஆங்காங்கே தேங்குவதால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கொசு தொல்லையை நீக்க கொசு மருந்து அடிக்க வேண்டும் என அப்பகுதிகள் எதிர்பார்க்கின்றனர்.