புகார் எதிரொலி

Update: 2026-03-08 10:44 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் ஆபத்தான முறையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து திறந்த நிலையில் பல மாதங்களாக கவனிப்பாரற்று கிடந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பள்ளியின் எதிரில் ஆபத்தான முறையில் இருந்த சாக்கடை மூடியை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்