சென்னை எர்ணாவூர் பகுதியில் உள்ள எண்ணூர்-எர்ணாவூர் மேம்பாலம் அதிகமான வாகன ஓட்டிகள் செல்லும் மிக முக்கிய பாலம். இந்த மேம்பாலத்தில் துறைமுகத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் பாலத்தில் ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றன். சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.