செங்கல்பட்டு மாவட்டம் சிறுநகர் ஊராட்சியில் பெரியகாளக்கடி சாலையில் இருந்து பிலாங்குப்பம் கிராமம் வரை உள்ள சாலை உடைந்து ஜல்லி கற்கள் மட்டுமே உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும் கற்கள் அதிகமாக இருப்பதால் நடக்க சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தரவேண்டி ஊர்மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.