குளம் சீரமைக்கப்படுமா?

Update: 2026-03-08 10:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருவாயில் கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி பள்ளி, கோவில், சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம குளத்தில் ஆகாய தாமரை மற்றும் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. செடிகளில் பாம்பு மற்றும் விஷ உயிரினங்கள் இருப்பதால் பொதுமக்கள் அதனை கடந்து செல்லும்போது அச்சத்துடனே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைத்து தரவேண்டி ஊர்மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்