'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2022-08-15 16:08 GMT

சேலம் வட்டமுத்தாம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டு அங்கு உள்ளவர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கடந்த 2 வருடமாக பயன்படுத்தாத நிலையில் பராமரிப்பின்றி கிடந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. தற்போது அந்த சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-கிள்ளிவளவன், வட்டமுத்தாம்பட்டி. சேலம்.

மேலும் செய்திகள்