'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-08-15 16:05 GMT

சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பகுதியில் சுப்பிரமணியபுரம் விரிவாக்க பகுதி சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அருகில் பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அந்த பள்ளத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடந்தன. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கையில் இறங்கினர். அந்த பள்ளத்தில் மண் போட்டு மூடினர். இதனால் அந்த பள்ளம் சரி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

- ராமன், சேலம்.

மேலும் செய்திகள்