இடியும் நிலையில் மயான கொட்டகை

Update: 2022-08-15 12:55 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊர் பயன்பாட்டிற்காக தொழுதூர் சாலையில் மயான கொட்டகை உள்ளது.ஆனால் தற்பொழுது இந்த மயான கொட்டகை எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதம் அடைந்த மயான கொட்டகையை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரத்தினகுமார்- பெருமங்கலம்

மேலும் செய்திகள்