தஞ்சையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக குதிரைகள் சுற்றி வருகின்றன. புதிய பஸ் நிலையம், ராஜீவ் நகர், வண்டிக்காரத்தெரு , ரெயில்நிலையம் போன்ற இடங்களில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூராக சுற்றும் குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை.