சென்னை மேடவாக்கம் கோயிலம்பாக்கம் இணைப்பு சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலையின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறார்கள். மேலும் குண்டும் குழியுமான இந்த சாலை மழைக்காலங்களில் குளம் போல காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் சாலையை சீர்செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.