தேங்கும் கழிவுநீர்...

Update: 2025-07-27 12:40 GMT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர்கோட்டம் ஹை ரோடு பகுதியில் சாலையின் இருபுறமும் பராமரிப்பு பணி காரணமாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மந்தமான பணி காரணமாக அந்த பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் குளம் போல தேங்கி கிடக்கும் அவலநிலை காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள சிறு,குறு கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பணியை விரைந்து முடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்