திருவள்ளூர்மாவட்டம் செங்குன்றம் காவாங்கரை மீன் சந்தை அருகே சாலையோரமாக சிலர் மீன்களை வெட்டி கொடுக்கிறார்கள். அப்போது மீன், கடல் உணவுகளின் கழிவுகளை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அதன் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் துயரத்தை அடைகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.