சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அங்குள்ள பயணசீட்டு முன்பதிவு செய்யும் பகுதிக்கு முன்புறம் உள்ள பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் அப்பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பயணிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.