சென்னை, ஜவகர் நகர் 6-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்காக குப்பைத்தொட்டிகள் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பல நாட்களாக அள்ளப்படாமல் குப்பைகள் குவித்துவைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் மிகவும் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் குடியிருப்புவாசிகள் முக சுளிப்புடன் நகரும் வகையில் அதன் காட்சிகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.