திருவள்ளூர் மாவட்டம், சக்திவேல் நகரில் உள்ள பிரதான சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மழைக்காலம் வந்துவிட்டால் அதில் நிரம்பும் மழைநீர் குளம் போல காட்சி அளிக்கிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க எடுக்கவேண்டும்.