திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் புழல் ஏரி அருகே உள்ள சாலை சந்திப்பு சிக்னலில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்தை சரிசெய்ய போலீசார் நிற்பதில்லை. இதனால் சாலை விதிகளை மதிக்காமல் வாகனஓட்டிகள் அங்கும் இங்கும் செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.