கண்டமனூரில் இருந்து அம்பாசமுத்திரம், கா.விலக்கு, கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளுக்கு 3 வழித்தடங்களில் சாலை உள்ளது. இந்த சாலைகள் சந்திக்கும் இடத்தில் வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதன்காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.