விழுப்புரம் முதல் விக்கிரவாண்டி அருகே அத்தியூர் திருக்கை வரை குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே கிராமமக்களின் நலன்கருதி கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தித்தர போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.