போக்குவரத்து இடையூறு

Update: 2026-02-22 15:51 GMT

 (படம்)

குமுளி, கம்பம் பகுதியில் இருந்து உத்தமபாளையத்துக்கு வரும் பஸ்களில் பல பழைய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகே பயணிகளை இறக்கிவிடாமல், பஸ் நிறுத்தத்துக்கு சற்று தொலைவில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்