அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும்

Update: 2026-02-22 18:35 GMT

திமிரி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள், 3 பேரூராட்சிகள் உள்ளன. மக்கள் அன்றாட தேவைக்கு பலர் திமிரிக்கு வந்து செல்கிறார்கள். பலர் பஸ்களில் வருகிறார்கள். பஸ்களில் வருவோர் புதிய பஸ் நிலையத்தில் இறங்கி 800 மீட்டர் தொலைவில் உள்ள பஜாருக்கு நடந்து வர வேண்டும். தற்போது திமிரி நேரு பஜாரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே ஒருசில டவுன் பஸ்கள் மட்டும் தான் நின்று செல்கின்றன. மற்ற பஸ்கள் நிற்பதில்லை. அதிகாரிகள் கூறியபடி அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேரு பஜாரில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நிரந்தரமாக நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

-வினோத்குமார், திமிரி.  

மேலும் செய்திகள்