திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி புதுநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர்தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகும் ஆபத்தான நிலை காணப்படுகிறது. கழிவுநீர் வெளியேற்றுவதற்கும் தகுந்த வடிகால் இல்லாததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.