பராமரிக்கப்படாத விளையாட்டு மைதானம்

Update: 2022-08-12 15:24 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அச்சமங்கலம் கிராமத்தில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு விளையாட்டு மைதானம் அமைத்தது. மேலும் மாணவ-மாணவிகள், இளைஞர்களுக்காக பல்வேறு விளையாட்டு உபகரணங்களையும் அமைத்து இருந்தனர். தற்போது அந்த விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படாமல் பயன்படாமல் இருக்கிறது. எனவே மாணவர்களின் எதிர்கால நலன் கருதி விளையாட்டு மைதானத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், அச்சமங்லம், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்