மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை சாலையில் பஸ் நிலையம் உள்ளது. ஆனால் இந்த பஸ் நிலையத்திற்குள் எந்த பயணிகள் பஸ்களும் வந்து செல்வதில்லை. இதனால் பஸ் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே அனைத்து பயணிகள்பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜேந்திரன்- வைத்தீஸ்வரன் கோவில்