மயிலாடுதுறை நகரின் பிரதான பஸ் நிலையமான காமராஜர் பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் அருகே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் இந்த பள்ளத்தில் இறங்கி வரும் நிலை உள்ளது. இதனால் பஸ் படிக்கட்டில் நிற்பவர்கள் தவறி விழுகின்றனர்.மேலும் நடந்து செல்லும் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.