மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாகுடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு சுகாதார வளாகம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வந்தது. ஆனால் தற்போதுசுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுடி, பொதுமக்கள்