தஞ்சை மாவட்டம் பேராவூரணி துறவிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே குடிநீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. தொட்டியின் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீர் தொட்டி எந்த நேரமும் விழும் நிலை உள்ளது. இதன் அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம்,நூலகம்,அங்கன்வாடி கட்டிடம், கிராம நிர்வாக அலுவலகம்,ரேசன் கடை போன்றவை உள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், துறவிக்காடு.