மோசமான சாலை

Update: 2025-08-10 13:12 GMT

சென்னை அடையார் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 6,7-வது பிரதான சாலைகள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டன. தற்போது இந்த சாலை மிகவும் மோசமாக, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் இதனால் அப்பகுதியில் கொசு தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்