திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள பச்சை அம்மன் கோவில் வடக்கு வாயில் அருகே பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாகவும் குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால் நோய்தொற்று பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூக்கை மூடிக்கொண்டே செல்லும் அவல நிலை தொடர்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதைசரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.