காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு என்.எஸ்.ஏ அவென்யூவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகமாக இருக்கிறது. இரவு நேரங்களில் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் மாணவ-மாணவிகள், பணி முடிந்து செல்லும் பெண்கள் என அனைவருமே அச்சத்துடனே சாலையில் செல்கிறார்கள். வாகன ஓட்டிகளின் பயணம் தெருநாய்களால் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் குடியிருப்புவாசிகளின் சிரமத்தை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.