சேதமடைந்த பாதாள சாக்கடைமூடி

Update: 2025-08-10 13:08 GMT

சென்னை வேளச்சேரி செக்போஸ்ட் சாலை வண்டிகாரன் தெருவில் உள்ள பாதாள சாக்கடைமூடி உடைந்து மிகவும் அபாயமானநிலையில் உள்ளது. இந்த சாலையில் குழந்தைகளுக்கான பள்ளியும் இருக்கிறது. பள்ளி முடிந்து வீடுதிரும்பும் மாணவ-மாணவிகள் அச்சத்துடனே செல்கிறார்கள். மேலும் அந்த பகுதி முழுவதும் மிகவும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அந்த பாதையை கடக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் அதை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்