பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா?

Update: 2025-08-10 13:23 GMT

திருவள்ளூர் மாவட்டம் அணைக்கட்டு சேரிகிராமத்தில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்சில் செல்ல பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் மழை வெயில் காலங்களில் பயணிகள் காத்திருப்பதற்கு அருகில் உள்ள கட்டிடங்களை தேடி செல்லும்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். ஆனால் அருகில் உள்ள எல்லா ஊர்களுக்கும் பஸ் நிறுத்தம் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்கு விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பஸ் நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்