திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோரில் அதிகமானோர் பஸ் போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள். இந்த பகுதிக்கு 73ஏ என்ற ஒரு பஸ் மட்டுமே வந்துசெல்கிறது. இதனால் மக்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருப்பதோடு, செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே வீட்டுவசதிவாரிய குடியிருப்புவரை இயக்கப்படும் மாநகர பஸ்களான 77ஏ மட்டும் 73சி பேருந்துகளை, ரயில்வே மேம்பாலம் வழியாக அருகில் உள்ள அண்ணனூர் ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்ய துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.