சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் பயன்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வளாகத்தின் ஒருபுறத்தில் குப்பைகள் மேடு போல குவிக்கப்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மழைக்காலம் வரை இதேநிலை நீடித்தால் நோய்த்தொற்று அபாயம் வரும். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்தி வளாகத்தை சுத்தப்படுத்த உடனடியாக நடவடிக்க எடுக்க வேண்டும்.