சென்னை அமைந்தகரை வட அகரம் சாலையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர்வடிகால் முறையாக கூவம் ஆற்றில் இணைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் மழைக்காலங்களில் இடுப்பளவுக்கு நீர் தேங்கும் அவலநிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினை சரிசெய்யப்படவில்லை என்றால், வருகிற மழைக்காலங்களில் இதேநிலை நீடிக்கும். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.