செங்கல்பட்டு, மேடவாக்கம் ஊராட்சி உட்பட்ட பாபு நகர் 1,2,3-வது பிரதான சாலையை பலதரப்பட்ட பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சாலையின் நிலைமை மிகவும் பரிதாபமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் சென்றாலே விபத்துகள் தேடிவரும் என்பதுபோல மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வாகனத்தில் பள்ளிக்குவிட செல்லும்போது ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்கிறார்கள். இங்கு தேங்கி கிடக்கும் கழிவுநீர் பார்ப்பதற்கு குட்டை போல கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும்.