திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். 75 -க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பல தெருக்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் என்பது விலை கொடுத்து வாங்கும் அவலநிலை இருக்கிறது. குறிப்பாக திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து 2 வாரங்களாக குடிநீர் வீணாக தெருவில் செல்கிறது. இதனால் அந்த தெருவே குளம் போல் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குடிநீர் குழாயை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.