கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2022-08-02 13:13 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டாரத்தில் அகனி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, தென்னங்குடி, மன்னன் கோவில், ஆலஞ்சேரி, கொண்டல், ஆதமங்கலம், ரெட்டிக்கோடங்குடி, பெருமங்கலம், அகர எலத்தூர், வடரெங்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் சீர்காழியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் போதுமான பஸ்கள் இல்லாமல் மாணவர்கள் அதிக அளவில் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பிரகாஷ்- அகரஎலத்தூர்

மேலும் செய்திகள்