மயிலாடுதுறையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளபள்ளி டபீர் தெருவில் உள்ளது. பள்ளி அருகில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் மண்டிக்கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் பள்ளிக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மாணவிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு புதர் போல் மண்டிக்கிடக்கும் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவிகள், மயிலாடுதுறை.