மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சியில் சானாங்குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தில் நீர் நிரம்பி உள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் குப்பைகள் மற்றும் கழிவுகளை இந்த குளத்தில் கொட்டி விடுகின்றனர். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்த குளத்தை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுத்தெரு, பொதுமக்கள்.