'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-07-30 15:59 GMT

சேலம் அம்மாபேட்டை 34-வது வார்டு ஜோதி தியேட்டர் கிழக்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் தண்ணீர் தொட்டி உடைந்து சேதம் அடைந்து இருந்தது. இதனால் தண்ணீர் வீணாகிறது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் உடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய குடிநீர் தொட்டியை வைத்து பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அந்தபகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

-சரவணன், ஜோதி தியேட்டர் கிழக்கு தெரு, சேலம்.

மேலும் செய்திகள்