சேதமடைந்த நூலகம்

Update: 2022-07-28 13:56 GMT


தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சில் கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் அய்யம்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், என அனைவரும் இந்த நூலகத்திற்கு வருகின்றனர். இந்த நியைில் நூலகம் கட்டிடம் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்தால் கட்டிட்டத்தில் மழை நீர் ஒழுகிறது. இதன் காரணமாக புத்தகங்கள் வீணாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலக கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திராவிட செல்வன், அய்யம்பேட்டை.

மேலும் செய்திகள்