தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டும் இன்றி திருவாருர், நாகை,புதுகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல பஸ் எப்போது வரும் என்ற நிலையில் காத்து கிடக்கின்றனர். எனவே மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பஸ் வந்து, செல்லும் கால அட்டவணை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.