தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா சருக்கை காலனி கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மிகவும் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றது. இதனால் எந்த நேரமும் இடிந்து விழும் நிலை உள்ளது.இந்த பகுதியில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதியகுடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருதுபாண்டியன், பாபநாசம்.