பாலூட்டும் அறை திறக்கப்படுமா?

Update: 2022-07-26 14:50 GMT


திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்திற்கு தினமும் தஞ்சை, திருச்சி, திருவையாறு, புதுக்கோட்டை,லால்குடி,கல்லக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளது. இந்த அறை பூட்டியே உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருக்காட்டுப்பள்ளி பஸ்நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க வேண்டும்.

பொதுமக்கள், திருக்காட்டுப்பள்ளி.

=============================

மேலும் செய்திகள்