போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்

Update: 2022-07-25 16:35 GMT


தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித்திரிகின்றன. அய்யன்கடை தெரு, மேலவீதி, புதிய பஸ் நிலையம் போன்ற இடங்களில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிபடுகின்றனர். மேலும் நிலைதடுமாறி வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். பள்ளிக்கூடங்கள் அருகில் இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும். மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும் செய்திகள்