தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி -பூதலூர் சாலையில் பிள்ளைவாய்க்கால் கரையில் அடி பம்பு ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் உள்ளது. அருகில் கோவில்மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதைந்த நிலையில் உள்ள அடிபம்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
பொதுமக்கள், பூதலூர்.